Friday 15 March 2019

சாதனைப் பெண் சசிக்கலாவின் வெற்றிக்கதை




கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர் திருமதி. சசிகலா. இவர்  கணினி பட்டதாரி, சசிகலாவின் கணவர் சொந்தத் தொழில் செய்து வருகிறார், தன் கணவரின் வேலைப் பளுவை குறைப்பதற்காக அவருக்கு சிறு சிறு உதவிகளை செய்வார், அப்பொழுது தன் தொழில் திறனை வளர்க்க திட்டமிட்டார், 

இந்த சூழ்நிலையில் குறுகிய காலத் திறன் பயிற்சியான  Domestic Data entry Operator பயிற்சியில் சேர்ந்து படிக்க திட்டமிட்டார். Skills India Foundation- KAMysore பயிற்சி மையத்தில் மத்திய அரசின் பிரதமர் திறன் மேம்பாட்டு திட்ட தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக செய்திதாள் மூலம் தெரிந்து கொண்டார் அதன் பின்னர் பயிற்சி மையம் சென்று தொழில் பயிற்சி விபரங்களை கேட்டறிந்து , Domestic Data entry Operator பயிற்சியை தேர்ந்து எடுத்தேன்.


440 மணிநேரம் கொண்ட பயிற்சியை 3 மாத காலம் தொடர்ச்சியாக பயிற்சிக்கு வருகை தந்து  திறம்பட அனைத்து செயல்முறை விளக்கங்களையும் தெரிந்துகொண்டேன். பயிற்சி ஆசிரியர் திருமதி. அம்பிகா அவர்கள் எல்லோருக்கும் எளிதாக புரிந்து கொள்ளும்படியாக செயல்முறை மற்றும் விளக்க வகுப்புகளை நடத்தினார்.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து ,மத்திய அரசின் சான்றிதலைப் பெற்றுக் கொண்டார் , அதன் பின்னர் தன்னுடைய கணவரின் தொழிலுக்கு தன் முழு பங்களிப்பை அளித்து வருகிறார் இதன் மூலம் மாதம் ஒன்றிற்கு 10000/- வரை வருமாணம் அதிகரித்துள்ளது. என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறார்.

இந்த தொழில் திறன் பயிற்சி அவரை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது,  அவருக்கு இந்த வாய்பை அளித்த Skills India Foundation -KAMysore தொழில் பயிற்சி மையத்திற்கும், பயிற்சி ஆசிரியர் மற்றும் மத்திய அரசின் PMKVY திட்டத்திற்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறார்.




No comments:

Post a Comment