என் பெயர் தினேஷ் குமார், தந்தை விவசாயி
, நான் EEE படித்துள்ளேன், ஆனால் என் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் கிடைத்த வேலைகளை
செய்து வந்தேன். ஆனால் வயதான தந்தையை ஓய்வு எடுக்க செய்து விட்டு என் வருமானத்தைக்
கொண்டு குடும்பத்தை வழி நடத்த முடியாத சூழ்நிலையில் இருந்து வந்தேன்.
அந்த நிலையில் ஈரோடு CSI
வளாகத்தில் உள்ள Skills India Foundation- Erode பயிற்சி மையத்தில் மத்திய அரசின்
பிரதமர் திறன் மேம்பாட்டு திட்ட தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக நண்பர்
திரு.அலஹாத் மூலம் அறிந்து கொண்டேன் அதன் பின்னர் பயிற்சி மையம் சென்று தொழில்
பயிற்சி விபரங்களை கேட்டறிந்து ,DTH Set Top Box Installation & Service
Technician பயிற்சியை தேர்ந்து எடுத்தேன்.
320
மணிநேரம் கொண்ட பயிற்சியை 2 மாத காலம் தொடர்ச்சியாக பயிற்சிக்கு வருகை தந்து திறம்பட அனைத்து செயல்முறை விளக்கங்களையும்
தெரிந்துகொண்டேன். பயிற்சி ஆசிரியர் திருமதி. மாயா அவர்கள் எல்லோருக்கும் இலகுவாக
புரிந்து கொள்ளும்படியாக செயல்முறை மற்றும் விளக்க வகுப்புகளை நடத்தினார்.
பயிற்சியின்
முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து ,மத்திய அரசின் சான்றிதழைப் பெற்றுக்
கொண்டேன் , அதன் பின்னர் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில்
கலந்து கொண்டு, வேலை கிடைத்து DTH Set Top Box Installation & Service
Technician ஆக பணியாற்றி வருகிறேன் மாதம்
ஒன்றிற்கு 15000/- வரை சம்பளம் கிடைக்கிறது. இந்த வருமாணம் பணி நிரந்திரம்
பெற்றபின் மேலும் அதிகரிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பொழுது என் தந்தை தன்
வாழ்க்கையை மகிழ்ச்சியாக களிக்கிறார். இந்த தருணம் எனக்கு நெகிழ்ச்சியாக உள்ளது.
இந்த
தொழில் திறன் பயிற்சி என்னை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது, எனக்கு இந்த வாய்பை அளித்த Skills India Foundation
-Erode தொழில் பயிற்சி மையத்திற்கும், பயிற்சி ஆசிரியர் மற்றும் மத்திய அரசின்
PMKVY திட்டத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை
தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment