திருமதி.யோகேஸ்வரி தன்னுடையவெற்றிக் கதையை
பகிர்ந்து கொள்கிறார். கர்நாடக மாநிலம், மைசூர், லலிதா நகர் பகுதியில் வசித்து வரும்
நான் B.Sc Computer Science படித்துள்ளேன்.எனக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளான்,
கணவர் தனியார் நிறுவணத்தில் Resource manager ஆக பணியாற்றுகிறார் அவருக்கு
மாதம் 10000/-ரூபாய் சம்பளம், இந்த தொகை என் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை.பட்டப்
படிப்பு படித்துள்ள நானும் ஏதாவது வேலைக்கு சென்றால் குடும்ப வருமானம் உயரும் என்று
எண்ணினேன்.
இந்த சூழ்நிலையில் Skills
India Foundation- KAMysore பயிற்சி மையத்தில் மத்திய அரசின் பிரதமர் திறன்
மேம்பாட்டு திட்ட தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக தன்னுடைய தோழி மூலம்
தெரிந்து கொண்டேன் அதன் பின்னர் பயிற்சி மையம் சென்று தொழில் பயிற்சி விபரங்களை
கேட்டறிந்து , Domestic Data entry Operator பயிற்சியை தேர்ந்து எடுத்தேன்.
440 மணிநேரம் கொண்ட பயிற்சியை 4 மாத காலம் தொடர்ச்சியாக
பயிற்சிக்கு வருகை தந்து திறம்பட
அனைத்து செயல்முறை விளக்கங்களையும் தெரிந்துகொண்டேன். பயிற்சி ஆசிரியர் திருமதி.
அம்பிகா அவர்கள் எல்லோருக்கும் எளிதாக புரிந்து கொள்ளும்படியாக செயல்முறை மற்றும்
விளக்க வகுப்புகளை நடத்தினார். பயிற்சியின் போது நடை பெற்ற யோக தினம், விளையாட்டு
விழா,ஆகியவற்றில் கலந்து கொண்டு பல பரிசுகளையும் பெற்றுள்ளேன்
பயிற்சியின்
முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து ,மத்திய அரசின் சான்றிதழைப் பெற்றுக்
கொண்டேன் ,அதன் பின்னர் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில்
கலந்து கொண்டு, வேலை கிடைத்து Data entry Operator ஆக பணியாற்றி வருகிறேன்.இதன் மூலம் எனக்கு மாத
வருமானமாக 9000/- கிடைக்கிறது. இப்பொழுது என் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக
உள்ளது
இந்த
தொழில் திறன் பயிற்சி என்னை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது, எனக்கு இந்த வாய்பை அளித்த Skills India Foundation
-KAMysore தொழில் பயிற்சி மையத்திற்கும், பயிற்சி ஆசிரியர் மற்றும் மத்திய அரசின்
PMKVY திட்டத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை
தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment